2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘கடந்தகாலத் தலைமைகள் சிறுபான்மையினத்தவரை பிரித்து ஆண்டனர்’

Kogilavani   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்  

“கடந்த காலத்தில், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்த தலைவர்கள், சிறுபான்மையின மக்களை, தமிழர், முஸ்லிம்கள் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர் என்று பிரித்து வைத்தனர். சிங்கள பெருந்தலைவர்களிடத்திலும் மத பெரியார்களிடத்திலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள், சரியான முறையில் கொண்டு  செல்லப்படாமையினாலேயே, பிரிவினைவாதம் நாட்டில் தலைதூக்கியுள்ளது” என்று, அமைச்சர் அமீர்அலி தெரிவித்தார்.  

மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,   

“அமைச்சர் இராதாகிருஷ்ணன், தன் சமூகத்தின்மீது பற்றுக்கொண்டவர் என்பதை, அவரது செயற்பாட்டினூடாக அறிந்துகொண்டேன். கடந்தகால மலையக அரசியல் தலைவர்கள், தங்களது சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்டிருந்தால், இன்று நுவரெலிய மாவட்டத்தில், பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.  

“பெற்றோர் வாங்கிய கடன், பிள்ளைகளை வந்து சேரும் என்பது போல, தற்போதைய மலையகத் தலைவர்கள் அந்தக் கடனை சுமக்கிறார்கள். ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தைக்கு அழகான உடையைத் தேடி வாங்குவோம். சிறந்த பாடசாலையில் இணைத்துவிடுவோம். பிள்ளைகளுக்கு கல்வியை புகட்டுவதற்கென, சிறந்த ஆசானைத் தேடுவோம். இவ்வாறு அனைத்து விடயங்களிலும் நல்லதை மட்டுமே தேடும் மக்கள், தேர்தல் காலங்களில் மட்டும் நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்கத் தவறிவிடுகின்றனர்.  

“மலையக மக்கள், கடந்த காலங்களில், சரியான தலைவர்களை தெரிவு செய்திருந்தால், இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.  

“மலையக மக்களுக்கும் மலையக இளைஞர்களுக்கும் சிறந்த ஒரு தலைவராக, இராதாகிருஷ்ணன் கிடைத்துள்ளார். அவரின் கரங்களையும் அவர் சார்ந்தவர்களது கரங்களையும் பலப்படுத்தி, வெற்றி பெற, மலையக மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .