Administrator / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கடந்த கால அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுப்பதே தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும் என தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
அக்கறணை பிரதேச செயலாக கேட்போர் கூடத்தில் நேற்ற (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'இந்நாட்டில் இன்று இருப்பது இதுவரை ஒருபோதும் நாம் காணாத ஓர் அரசாங்கமாகும். ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து ஓர் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன. இதில் எவ்வித பேதமும் இல்லை. அதேபோன்று நாட்டு மக்களும் கட்சி பேதம் மறந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பல விதங்களில் பழி தீர்க்கப்பட்டனர். ஆனாலும் நல்லாட்சியில் அவ்வாறான நிலைமை ஏற்படாது' என்று தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago