2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

கடற்படைக்கு சொந்தமான பவுசர் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு; சிறுவன் காயம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை, தலாது-ஓயா கடற்படைக்குச் சொந்தமான நீரேற்றிச் சென்ற பவுசர் வண்டியொன்று, எதிரே வந்த முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த 65 வயதான பெண் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டியின் சாரதியான சிறுவன் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

முச்சக்கரவண்டியின் சாரதி, 16 வயதானவர் எனவும்; பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

பவுசர் வண்டியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .