Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள், நேற்று (17) தாக்கல் செய்யப்பட்டன.
இதன்போது பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்டத் தலைவரும் அமைச்சருமான மஹிந்தானந்த அலுத்கமகே, அமைச்சர்களான கெஹெலிய றம்புக்வெல்ல, லொஹான் ரத்வத்த உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்பதனாலேயே, வேட்பு மனுவைத் தாக்கல் செய்ததாகவும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

15 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago