Kogilavani / 2021 மே 05 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில், புதிய தொற்றாளர்கள் 124 பேர் இன்று (5) இனங்காணப்பட்டுள்ள நியைில், மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,255ஐ கடந்துள்ளதாக, சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
உடதும்பர பிரதேசத்தில் 35 பேரும் கண்டி நகர பிரிவில் 27 பேரும், வத்தேகமவில் 16 பேரும், மெனிக்ஹின்ன, குண்டசாலை ஆகிய பிரதேசங்களில் 9 பேரும், கடுகண்ணாவ பிரதேசத்தில் 8 பேரும், உடுநுவர பிரதேசத்தில் 5 பேரும், கலகெதர பிரதேசத்தில் 4 பேரும், கங்கவட்டகோரளயே, கம்பளை ஆகிய பிரதேசங்களில் 3 பேரும் பூஜாப்பிட்டிய, அக்குறணை, ஹாரிஸ்பத்துவ, பன்விலை ஆகிய பிரதேசங்களில் ஒருவரும் இன்று இனங்காணப்பட்டுள்ளனர்.
கண்டி நகரசபைப் பிரிவிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை மேற்படிப் பிரிவில், 902 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அக்குறணை பொதுசுகாதார அதிகாரப் பிரிவில் 563 பேரும் குண்டசாலை நகர பொதுசுகாதாரப் பிரிவில் 482 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் இதுவரை 77 கொரோன மரணங்கள் பதிவாகியுள்ளன.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago