2026 மே 14, வியாழக்கிழமை

dd

கண்டி மாவட்டத்தில் 365 பேர் பாதிப்பு

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில், கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி மாவட்டத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

அந்த வகையில், பஸ்பாகே கோரலய, குண்டசாலை, மினிபே, பன்வில, பாத்ததும்பறை, தெல்தோட்டை, மெததும்பறை, கலகெதர, அக்குறணை, உடதும்பறை ஆகிய பிரதேச செயலகத்திலேயே, 356 ​பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில், 16 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மினிபே பிரதேசச் செயலகப் பிரிவில் அமைக்க்ப்பட்டுள்ள தற்காலிக முகாம் ஒன்றில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட செயலகம் ஊடாகவும் பிரதேசச் செயலகங்களின் உதவியுடனும் பெற்றுக்கொடுப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .