Niroshini / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மலையகத்தில் கணித, விஞ்ஞான துறைசார் தொழில்வாய்ப்புக்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது” என மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பத்தனை ஸ்ரீ பாத கல்லூரியில் இடம்பெற்ற உயர்தர மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான துறைகளுக்கான கருத்தரங்கை ஆரம்பித்து வைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், ஸ்ரீ பாத கல்லூரியின் விரிவுரையாளர் மெத்தியூஸ், தொண்டமானாறு கல்வி நிலைய வளவாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“தற்போதைய கால சூழ்நிலையில் மலையகத்தின் கல்வி வளர்ச்சியானது சற்று முன்னேற்றகரமானதாகவே காணப்படுகின்றது. என்றாலும் கூட தற்போது கணித, விஞ்ஞான பாட ரீதியான ஆசிரிய மற்றும் ஏனைய துறைகளுக்கான கேள்வியும் அதிகரித்து காணப்படுகின்றது.
மேலும், மலையக கல்வி வலயங்களில் கணித மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதற்கான பட்டதாரிகளை தெரிவு செய்து ஆசிரிய நியமனங்களை வழங்க முனைகின்ற போது, மலையகத்தில் கணித மற்றும் விஞ்ஞான துறைகளுக்குரிய பட்டதாரிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே காணப்படுகின்றனர்.
இதனால், தற்போது கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்குரிய பட்டதாரிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதற்கான ஆசிரிய நியமனங்களுக்காக இன்றும் நாம் வெளிமாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, தற்போது உயர்தரத்தில் கணித மற்றும் விஞ்ஞான துறைகளில் கல்விகற்கின்ற மாணவர்கள் மிகுந்த கரிசனையோடு உயர்தர பரீட்சைகளில் தோற்றி சித்திபெற வேண்டும். அப்போதுதான் மலையகத்தில் காணப்படுகின்ற இத்துறைகளுக்கான வெற்றிடங்களை நிரப்பிக்கொள்ள முடியும். எனவே தற்போது உயர்தரத்தில் பயிலுகின்ற மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்று பொறயியலாளர்களாக, மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக மற்றும் கணித, விஞ்ஞானபாட பட்டதாரி ஆசிரியர்களாக வரவேண்டும்.
இதனை நாங்கள் கருத்திற்கொண்டே உயர்தர கணித விஞ்ஞான பாடங்களுக்கான கருத்தரங்குகளுக்கான அனுசரணைகளை வழங்கி வருகின்றோம்” என்றார்.
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago