Niroshini / 2021 மே 10 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
கம்பனிகளின் அழுத்தங்களுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் அடிப்பணியாதெனத் தெரிவித்த அத்தொழிற்சங்கத்தின் நிதிக் காரியதரிசியும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், தமதுத் தொழிற்சங்கத்துக்கான சந்தாவை தொழிலாளர்கள் நிறுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் தமிழ்மிருக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தொழிலாளர்கள் சந்தாவை நிறுத்தவில்லை என்றும் பெருந்தோட்டக் கம்பனிகளே சந்தா அறவிடுவதை நிறுத்தியுள்ளன என்றும் தெரிவித்த அவர், எனவே தோட்டத் தலைவர்கள், சந்தாவை சேமித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூக்கு அனுப்பி வைப்பார்களெனவும் தெரிவித்தார்.
1967ஆம் ஆண்டுக்கு முன்னர், தோட்டத் தலைவர்களே தொழிற்சங்கங்களுக்கான சந்தாக்களை சேமித்து தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைத்தனர் என்றும் கம்பனிகளின் செயற்பாட்டால் தமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கியிருப்பதால், தொழிலாளர்கள் மேலதிகமாகக் கொழுந்துகளை பறிக்க வேண்டுமென கம்பனிகள் அழுத்தங்களை வழங்குவதாகவும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அடிப்பணிய வைக்கவே தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை கம்பனிகள் நிறுத்தியுள்ளனவெனவும் தெரிவித்தார்.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago