Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
இரத்தோட்டை பிரதேசத்தில் பாரியளவில் கற்குவாரிகள் காணப்படுவதால், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதைப் போன்று மக்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைப்பின் ஏற்பாட்டாளர் சிசிரகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மாத்தளை மாவட்ட சுற்றாடல் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இரத்தோட்டை பிரதேசத்தில் 15 கற்குவாரிகள் காணப்படுகின்றன. இது இரத்தோட்டை பிரதேசத்தில் மண்சரிவுகள் ஏற்படுகின்றமைக்குக் காரணமாக அமைந்துள்ளது எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த இரத்தோட்டை பிரதேச செயலாளர் நிஷாந்த தினிபிரிய ஹேரத், இந்த கற்குவாரிகளுக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து தாம் அவதானம் செலுத்திவருவதுடன், இந்த விடயம் குறித்து தேசிய கட்டட ஆயவு மய்யத்தின் அறிக்கையையும் கோரியுள்ளோம் என்றார்.
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago