Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார இலங்கதிலக
வலப்பனை- மலபட்டாவ பிரதேசத்தில், சனிக்கிழமை (30) மண்சரிவு இடம்பெற்ற இடத்துக்கு அருகில் காணப்படும் கற்குவாரியை உடனடியாக அப்புறப்படுத்துமாறு, வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று (03) சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலப்பனை ஸ்ரீ தர்மராஜாரமய விகாரையின் விகாராதிபதி தலைமையில், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து, வலப்பனை- கண்டி வீதி, நாரன்தலாவ சந்தியை மறித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி இடத்தில் ஏற்பட்ட மண்சரிவால் நால்வர் மண்ணுள் புதையுண்டதுடன், அவர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் இருவரை மீட்கும் பணி மூன்றாவது நாளான இன்று (3) வரை தொடர்ந்ததுடன் இறுதியில் மீட்புப் பணி நேற்று கைவிடப்பட்டது.
குறித்த கற்குவாரியானது, சீன நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டு வருகிறது. கற்குவாரியின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்துகொண்டதால், மண்சரிவால் உயிரிழந்த பண்டார என்பவர், கடந்த வருடம், கற்குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அந்த இடத்திலிருந்து தான் போகப்போவதில்லை என்று தெரிவித்து, ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார் என, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்தக் கற்குவாரி தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கும் வரை, தாம் சத்தியாகிரகத்தைக் கைவிடப் போவதில்லை என்று, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மண்சரிவில் காணாமல் போயுள்ள 15 வயது மாணவனின் சடலம் 3ஆவது நாளான நேற்றும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், குறித்த மாணவனின் சடலத்தை தேடும் பணிகளை, நேற்றுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்திருந்தார்.
மேலும் அனர்த்தம் இடம்பெற்ற மலபட்டாவ- கல்வல பகுதியில் ஆபத்தான இடத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரும் நிலையில், இவர்கள் தற்போது, 2 விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
14 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago