2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் இல்லாமையினால் கல்விநிலை பாதிப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்திலுள்ள பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் முறையாக கிடைக்கப்பெறாமையினால் செயல்முறையான பாடங்களில் மாணவர்களின் அடைவு மட்டம் குறைவடைந்து செல்வதாகவும் இதனைக்கருத்திற்கொண்டு இவ்வாறான உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். 

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் 3 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் இலக்கம் 2  பாடசாலை மாணவர்களுக்கான இசைக்கருவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மலையகத்தமிழ் பாடசாலைகளில் விளையாட்டு உபகரணங்கள் , இசைக்கருவிகள், ஆய்வுக்கூட உபகரணங்கள் என்பன முறையாக கிடைக்காத காரணத்தினால் செயன்முறை பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளன. இந்தக்குறை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியின் ஊடாகவும் மாகாணசபையின் நிதியின் ஊடாகவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .