Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 02 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள கலஹா வைத்தியசாலையை மீளத் திறக்குமாறுக் கோரி, பிரதேசவாசிகள் இன்று (2) கலஹா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 28ஆம் திகதியிலிருந்து வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதால், தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் இடமாற்றப்பட்டுள்ள நிலையில், வைத்தியர் ஒருவர் இல்லாத காரணத்தினால் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதால், திடீர் நோய்வாய்படும் நோயாளர்கள் 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தெல்தொட்டை பிரதேச வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி காலை கலஹா வைத்தியசாலையில்,அனுமதிக்கப்பட்ட 2 வயதுக் குழந்தையொன்று, பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவத்தையடுத்து, ஆத்திரமுற்ற பிரதேச மக்கள், வைத்தியசாலை வளாகத்தைச் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலையின் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததையடுத்து கலஹா வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது.
அத்துடன், சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமைத் தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
6 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago