Kogilavani / 2017 ஜூலை 12 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}




டி.ஷங்கீதன்
கல்வியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகடிவதைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்லூரியின் பீடதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
'ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியில், அண்மையில் பகடிவதை இடம்பெற்றதாக, எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பகடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்டதாக தெரியவருகிறது. இது தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்லூரியின் பீடாதிபதியை பணித்துள்ளேனம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய தண்டனையை வழங்குமாறும் பீடாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' என்றும் அவர் கூறினார்.
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு, உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 113 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து, ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், 'எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும்போது, எந்தக் காரணம் கொண்டும், ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியமனம் வழங்கப்படமாட்டாது. இந்த நியமனத்தில், பல குளறுபடிகள் நிலவுகின்றன. ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே, இதற்கு முக்கியக் காரணம்.
'கடந்த சில நாட்களுக்கு முன்பு, பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்ற பகடிவதை தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக கல்லூரியின் பீடாதிபதியிடம் தொடர்புகொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டேன்.
கல்லூரியில் இருக்கின்ற இறுதியாண்டு மாணவர்கள் எந்தக் காரணம் கொண்டும் பகடிவதையில் ஈடுபடக்கூடாது. அறிவுறுத்தல்களையும் மீறி, மாணவர்கள் பகடிவதையில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.
இந்தக் கல்லூரியை வளர்த்தெடுப்பதற்காக நான் பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். ஆனால், மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago