Niroshini / 2021 மே 09 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுதத் எச்.எம்.ஹேவா
ஹட்டன்-பொகவந்தலாவ வீதி புனரமைப்புப் பணியின் போது, மண்மேட்டுடன் பாரிய கல்லொன்று புரண்டு விழுந்ததில், புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெக்கோ இயந்திரம் மூலம் மண்மேடை வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே, பாரிய கல்லொன்றுடன் மண்மேடு சரிந்து மறுகரையில் விழுந்துள்ளது.
இதன்போது மறுகரையில் புல்வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது கல் விழுந்ததில் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
பிரதேச மக்கள், வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் இணைந்து இளைஞனை மீட்டு பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago