2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கழிவுத் தேயிலைத் தூளுடன் இருவர் கைது

Kogilavani   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

பூண்டுலோயா தேயிலைத் தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றச்செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோகிராம் கழிவு தேயிலைத் தூளை, தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (22) கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைதுசெய்துள்ளனர். 

அக்கரப்பத்தனை, போபத்தலாவ பகுதியிலிருந்து, குறித்த கழிவுத் தேயிலை தூள் கம்பளைக்கு கொண்டுசெல்லப்படவிருந்தது. 

பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வைக்கப்பட்டதன் பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X