2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

கழிவு பொருட்களில் கொம்போஸ் உரம் தயாரிக்க நடவடிக்கை

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

பாடசாலைகளில் கழிவுப் பொருட்களை சேகரித்து அதன் மூலம் கொம்போஸ் உரம் தயாரிப்பதற்காக விசேட வேலைத்திட்டத்தை சப்ரகமுவ மாகாண சபை ஆரம்பித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகளில் ஒதுக்கப்படும் கழிவு பொருட்களை சேகரித்து அதன்மூலம் கொம்போஸ் உரம் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை சப்ரகமுவ மாகாண சபை ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதக்கீட்டில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு  கழிவுப்பொருட்களை சேகரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று(28) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

மேற்படி பாடசாலைகளில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கொம்போஸ் உரத்தை மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதுடன், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு இம்மாகாணத்தில் வாழும் மக்களுக்கு விசத்தன்மையற்ற சிறந்த மரக்கறி வகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.பெலிகம்மன, சப்ரகமுவ மாகாண சபையின் உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் டி.டபிள்யூ.எஸ்.ராஜபக்ஷ, ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .