Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 22 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்பட மேற்பிரிவில் லயன் அறைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவுக்கு தீ வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டுவந்த நபர், ஐந்து மாதங்களுக்குப் பின்னர், நோர்வூட் போற்றி தோட்டத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (21) கைது செய்யப்பட்டார்.
மேற்படி சந்தேக நபரை, போற்றி தோட்ட மக்கள் மடக்கி பிடித்து தம்மிடம் ஒப்படைத்தனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேகநபர் நபர் பொகவந்தலாவ எல்பட மேல்பிரிவில் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபரை திருமணம் முடிக்க, காதலி மறுத்துவிட்டார். இந்நிலையிலேயே, அப்பெண்ணின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவுக்கு தீவைத்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.
எனினும், தன்னுடைய காதலி, போற்றி தோட்டத்திலுள்ள ஆலயத்துக்கு வருகைதந்ததை அறிந்து, அங்கு விரைந்த சந்தேகநபர், அப்பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார்.
இதனை அவதானித்த அந்த மக்கள், அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர் நோர்வூட் நிவ்வெளி பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
8 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
19 Jul 2025