2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காவத்தை இரட்டைக் கொலை; குற்றவாளிக்கு மரணதண்டனை

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவத்தை, கொட்டகெத்தன நயனா நில்மினி மற்றும் காவிந்தியா சத்துரங்கி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட லொக்குகமகே ஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி இதற்கான உத்தரவை இன்று (15) பிறப்பித்தார். அத்துடன், குற்றவாளிக்கு எதிராக, கொலை சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், சூழ்நிலை மற்றும் சான்றுகளைப் பயன்படுத்தி வழக்கின் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

63 வயதுடைய எல்.ஜீ.பிரேமவதி, அவரது மகள் எச்.ஜீ.புஸ்பகுமாரி (வயது 23) ஆகிய இருவரும், 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி, படுகொலை செய்யப்பட்டனர். 

இச்சம்பவம் குறித்து மூவர் மீது, சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X