2026 ஜனவரி 21, புதன்கிழமை

கித்துள் செய்கையை மேம்படுத்த 4,000 மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம்

Kogilavani   / 2021 மே 05 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாணத்தில், கித்துள் செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக குறித்த மாகாணத்தில் புதிதாக  4000 புதிய கித்துள் மரக் கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தொழிற் துறையை மேம்படுத்துவதற்காக அதிகாரசபையொன்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

கித்துள் தொழிற்றுறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனியான நிறுவனம் ஒன்றை அமைத்துள்ளார் என்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சந்தைகளுக்குத் தரமான கித்துள் உற்பத்தியை வழங்குவதும் கித்துள் செய்கையாளர்களின் நலனை பேணுவதுமே இதன் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X