2026 ஜனவரி 21, புதன்கிழமை

குடிநீர் போத்தல்கள் கையளிப்பு

Kogilavani   / 2021 மே 16 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா  மீப்பிலிமான கந்தேஎல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்காக  ஒரு தொகை குடிநீர் போத்தல்களை, நுவரெலியா பிரதேச சபையின தவிசாளர் வேலு யோகராஜ், மாவட்டத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஹசித்தவிடம் கையளித்தார்.

இராணுவத்தினரின் நேரடி கண்காணப்பின் கீழ், மேற்படித் தனிமைப்படுத்தல் நிலையம் இயங்கவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், பிரதேச சபையின் உபதவிசாளர் சரத்குமார்,  பிரதேச சபை உறுப்பினர் ராமஜெயம், நுவரெலியா பிராந்தியத்துக்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X