மு.இராமச்சந்திரன் / 2017 ஜூன் 17 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியத்தில் 7 பெண் தொழிலாளர்கள், பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், நேற்றுக் காலை 11.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
11ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டு இருந்த பெண் தொழிலாளர்களே, இந்த அனர்த்ததுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதேவேளை, குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளர்களை, வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு அம்பூலன்ஸ் வசதிகள் எதையும் தோட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லையென, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago