Editorial / 2018 ஜூன் 16 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
புஸ்ஸல்லாவ, வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் வசித்து வந்த துவான் தில்கான் (வயது 24) எனும் இளைஞன், இன்று (16) காலை ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன், இன்று காலை வேளையில் தனது தப்பிகள் இருவருடன் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளார்.
எனினும், தம்பிகள் இருவரும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தால். உடனடியாகக் குளித்து விட்டுச் சென்றுள்ளனர். பின் இளைஞனைக் காணவில்லை என உறவினர்கள் தேடிய பொழுது, இளைஞன் சடலமாக ஆற்றில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளை, புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


9 minute ago
19 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
32 minute ago
1 hours ago