2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

“கூட்டணி ஓரணியாக செயற்படும்”

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூலை 21 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவதற்கு ஆலோசித்துள்ளதாக,   மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு ஏற்ப, ஹட்டன் எபோட்ஸிலி தோட்ட ஆனைத் தோட்டப்பிரிவில் ஏற்படுத்தப்படவுள்ள தனி வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர்  இவ்வாறு கூறினார்.

மேலும் கூறிய அவர்,

“தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து மலையகத் தமிழ் சமூகத்துக்கு உறுதியான தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றன. அதேபோன்று, தொழிற்சங்கக் கட்டமைப்பில் வெவ்வேறாக செயற்படுகின்ற நாம், எதிர்காலத்தில் ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவதற்கு ஆலோசித்து வருகின்றோம்.

“இதன்மூலம், தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இன்று நாம் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் தனி வீட்டுக் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வருடத்துக்குள் 3,000 பேருக்கு,  காணி உறுதிப் பத்திரங்களை வழங்கவுள்ளோம்.

“மலையக நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில், ஹட்டன் நகரை தற்போது அபிவிருத்தி செய்து வருகின்றோம். மக்கள் நலன் கருதி நாம் முன்னெடுக்கின்ற நல்ல விடயங்களை, சிலர் காழ்ப்புணர்வுடன் நோக்கினாலும், எமது பணிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X