Niroshini / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுமணசிறி குணதிலக
சியாம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆதிமலை பகுதியில் உள்ள 5 கூட்டுறவு சங்கங்க கடைகள் மூடப்பட்டதால், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுதம்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதிமலை பல்நோக்கு கூட்டுறவு சங்க நிறுவனத்துக்குச் சொந்தமான ஆதிமலையின் 300ஆவது பிரிவு, 60ஆவது பிரிவு, கொட்டியாகல, விலாஓயா, திஸ்ஸபுர ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், சுமார் 30, 000 பேர் வரை வாழ்கின்றனர். அவர்களது பொருள் நுகர்வு தேவையை பூர்த்தி செய்வது அந்தக் கூட்டுறவு சங்க கடைகள் மாத்திரமே ஆகுமெனவும், அக்கபகுதி மக்கள் கூறினர்.
இது குறித்து மொனராகலை கூட்டுறவுச் சங்கத்தின் உப ஆணையாளர் காரியாலயத்தின் உயர் அதிகாரியிடம் வினவியபோது, அதற்கு பதிலளித்த அவர், மாவட்டத்தில் உள்ள 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க கடைகள் மூடப்பட்டுள்ளன என்று கூறினார்.
இருப்பினும், பொதுமக்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்டோருடன் கலந்தாலோசித்து, மூடப்பட்ட சில கூட்டுறவு கடைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago