2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கெசல்கமுவ ஆற்றிலிருந்து மகாலிங்கத்தின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2023 ஜனவரி 03 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

வீட்டில் இருந்து காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலம் கெசல்கமுவ ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒஸ்போன் தோட்டத்தில் வசித்தபொன்னுசாமி மகாலிங்கம் (வயது 73) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார்  என அவரது உறவினர்கள் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்

இந்த நிலையில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், ஆற்றில்    சடலம்  மிதப்பதை அவதானித்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலத்தை ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் டிக்கோயா  ஆரம்ப வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .