Kogilavani / 2021 மே 13 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரா.கமல்
கேகாலை மாவட்டத்தில் 8 தமிழ்மொழி பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சின் 1,000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் கேகாலை மாவட்டத்தில் மொத்தமாக 38 பாடசாலைகள் தேசிய பாடசாகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இவற்றில் தமிழ்மொழி பாடசாலைகள் 8 உள்ளடங்குகின்றன.
அந்தவகையில் 04 தமிழ்பாடசாலைகளும் 04 முஸ்லிம் பாடசாலைகளும் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
தெஹியோவிட்ட கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயம், எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயம், தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம், கன்னந்தொட்டை சுலைமானியா மத்திய கல்லூரி, கேகாலை கல்வி வலயத்தில் கேகாலை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயம், வரக்காபொல பாபுல் ஹசன் முஸ்லிம் மகா வித்தியாலயம், மாவனெல்லை கல்வி வலயத்தில் அல்-அசார் முஸ்லிம் மகா வித்தியாலம், பதுர்தியா முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் தரமுயர்வு கடிதங்கள் கல்வி அமைசினால், பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago