Editorial / 2018 மே 13 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}


ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதீஸ்
ஹட்டன் - கொழும்புப் பிரதான வீதி, வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள தற்காலிக வியாபார நிலையத்திலிருந்த (வடை கடை) கேஸ் சிலிண்டர் வெடித்ததில், அந்நிலையம் முற்றுமுழுதாகத் தீக்கிரையாகியுள்ளதென, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதில், எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்றுத் தெரிவித்த பொலிஸார், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி வழியான போக்குவரத்தை, 30 நிமிடங்கள் இடைநிறுத்தி வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago