Janu / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலை யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்றும், கதிர்காமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும் இரத்தினபுரி, கொடகவெல, மல்வத்தை பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளதுடன் அதில் பத்து வயதுடைய சிறுவன் ஒருவனும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் உடனடியாக கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களின் தலை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடகவெல பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago