R.Tharaniya / 2025 ஜூன் 11 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் காற்றுடன் கூடிய அடை மழையில் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) அன்று இரவு மண்மேடு சரிந்து வீழ்த்துள்ளமையினால் ஒருவழிப் போக்குவரத்து இடம்பெற்று வருகிறது
அதே போல நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் இரண்டாம் கட்டைப் பகுதியில் பாரிய மரமொன்று வீதியில் விழுந்து உள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடை பட்டது.
கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவி வருகின்ற மையினால் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதுடன் வீதிகள் வழுக்கல் தன்மை காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
எம்.கிருஸ்ணா



35 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago