Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ். எஸ்.சதீஸ்
கொட்டக்கலை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு, சபை உறுப்பினர்களின் 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
16 உறுப்பினர்களைக் கொண்ட கொட்டக்கலை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு, சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில், இன்று (19) காலை, கொட்டக்கலை பிரதேச சபைக் கூட்டணி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டுப் பிரேரணையை, சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் சபையில் முன்வைத்தார்.
இதன்போது, ஆளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுவருடன் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் ஒருவர், ஐக்கிய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர், பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த நிலையில், கொட்டக்கலை பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் நால்வர் பாதீட்டு பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் இருவரில், ஒருவர் சபைக்கு சமூகமளிக்காக நிலையில், ஒருவர் நடுநிலையிலும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலையிலும் இருந்தனர்.
18 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago