2025 மே 14, புதன்கிழமை

கொத்மலை விபத்து ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

Editorial   / 2025 மே 11 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

 மேலும் 58 பேர் காயமடைந்துள்ளதோடு  பலரின்  நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  

விபத்தில் சிக்குண்டவர்களை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர் மேலும்  விபத்து தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று கொத்மலை கெரண்டிஎல்ல பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X