2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொரோனா செய்தித் துளிகள்

Kogilavani   / 2021 மே 11 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பகமுவ பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 81 வயது பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றினால், நேற்று முன்தினம் (10) மரணமடைந்துள்ளார் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நகரை, இன்று (12) முதல் ஒரு வாரத்துக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மொனாரகலை பிரதேச சபையின் தவிசாளர் ஆர். எம். ரத்னவீர தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், தலவாக்கலை சென்கிளையார் பகுதியிலுள்ள விகாரை மற்றும் வர்த்தக நிலையயொன்றுக்கு வந்துச் சென்றுள்ளதால், விகாரையின் இரு பிக்குகள் உள்ளடங்களாக ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 62 வயது பெண்ணொருவர், சிகிச்சைப் பலனின்றி, நேற்று முன்தினம் (10) இரவு மரணமடைந்துள்ளார்.

பசறைப் பகுதியில், கொவிட் 19 தொற்றினால் 67, 53 வயதுடைய இருவர், நேற்று முன்தினம் (10) மரணமடைந்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள தம்புளை நகரில், சட்டவிதிமுறைகளை மீறி வியாபார நிலையமொன்றில் பணியாற்றிவந்த 10 பேரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X