Kogilavani / 2021 மே 12 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொது காதாரப் பிரிவில் அறுவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கிளண்டில் தோட்டக் காரியாலயம் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்னர். (செ.தி.பெருமாள்)
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் 23ஆக உயர்வடைந்துள்ளன என்று, நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. (சுதத்.எச்.எம்.ஹேவா)
நாட்டின் தற்போதைய கொவிட் 19 நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுசுகாதார விதிமுறைகளை முறையாக பேணி நடக்குமாறு, ஹட்டன்-டிக்கோயா நகரசபை தலைவர் ச.பாலச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். (காமினி பண்டார)
மாத்தளை மாவட்டத்தில், 24 மணித்தியாலங்களில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மரணத்திவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளது. (மஹேஷ் கீர்த்திரத்ன)
கலவான பொதுசுகாதாரப் பிரிவில் 140 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை. (சுமணசிறி பண்டார)
சப்ரகமுவ மாகாணத்தில் மருந்தகங்களைத் தவிர ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மாலை 7.00 மணியுடன் மூடுவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (உபேந்திர பிரியங்கர)
ஹாலிஎல சமுர்த்தி அபிவிருத்தி வங்கியின் காசாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வங்கி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. (எம்.செல்வராஜா)
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago