2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கோழி திருடர்கள் கைது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்   

அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துணுவில பிரதேசத்தில், வீடொன்றில் வளர்த்து வந்த சுமார் 11,500 ரூபாய் பெறுமதியான 9 கோழிகளை திருடி, அக்குறணை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்த இருவரை, அலவத்துகொடை பொலிஸார், நேற்று (17) கைதுசெய்துள்ளனர்.   

வீட்டின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளனர். அலவத்துகொடையை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .