Kogilavani / 2016 ஜூன் 07 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ
கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3,500 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கேகாலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இக்குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பதற்கு கேகாலை மாவட்டத்தில் 511 ஏக்கர் காணி இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம், கேகாலை மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், அமைச்சர்களான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, கபிர் ஹசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோரின் தலைமையில் திங்கட்கிழமை(6) நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான காணிகளை ஒதுக்குவதுக் குறித்து ஜனாதிபதியால் பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளாத இதன்போது தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை குடியேற்றும் பகுதிகளில் வீதிகள், நீர், மின்சாரம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உடனடியாக பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கேகாலை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள 3,500 வீடுகளுக்கும் மேலதிகமாக களுபான தோட்டத்தில் 100 வீடுகளும் மற்றும் டென்ஸ்வட் தோட்டத்தில் 48 வீடுகளும் 6 பாடசாலைகளும் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக அபிவிருத்துக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை அமைப்பதற்காக கண்டறியப்பட்டுள்ள காணிகள் மற்றும் தேவைப்படும் காணிகள் குறித்த மேலதிக விடயங்களை பெற்றுகொள்வதற்காக கேகாலை மாவட்டத்தில அந்தந்த பிரதேச செயலகப் பிரிவின் செயலாளர் அடங்கிய குழுவொன்றும் இதன்போது நியமிக்கப்பட்டது.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago