Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுரெலியவில் வீடொன்றை கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி, துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தி விட்டு, வீட்டில் இருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் தப்பிச் சென்றார் என்ற குற்றஞ்சாட்டில் ஒருவரும் அவருக்கு உதவியதாக கூறப்படும் நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு 7.30 மணியளவில் பதுரலிய பகுதியில் பிரதேசத்தில் வைத்து ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 12 கட்டுத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. அத்துடன், குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் 22, 40, 44 மற்றும் 30 வயதையுடையவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை பதுரெலிய பொலிஸார் மேலும் விசாரணைகளுக்குட்படுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026