Sudharshini / 2016 ஜூலை 03 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அலவத்துகொடை நகரில் சனிக்கிழமை(02) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, 35,750 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் 44, 48 வயது நிரம்பிய இருவரை அலவத்துகொடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அலவத்துகொடை நகரில் நடத்திய சோதனையின்போது மாத்தளையில் இருந்து வந்த முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்குட்படுத்திய பொலிஸார், 20,300 மில்லி கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, மாத்தளை - உக்குவலை பிரதேசத்தில் இரண்டு மோப்ப நாய்களின் உதவியுடன் மேலும் ஒரு சந்தேக நபரை 15,450 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சந்தேக நபர்களுள் ஒருவர் அக்குறணை- மேல்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் மற்றவர் மாத்தளை - உக்குவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago