Niroshini / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுதத் எச்.எம். ஹேவா
ஹட்டன் டிக்கோயா நகர சபை பகுதியில் நடைபெறும் கராத்தே வகுப்புகள் நடன வகுப்புகளை நிறுத்துவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளனவென, ஹட்டன் டிக்கோயா நகர சபை தவிசாளர் சதயன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போதைய கொரோனாவைரஸ் பரவல் அச்சத்தை கருத்தில் கொண்டே, இந்த நடவக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹட்டன் டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி வகுப்புகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதைத் தொடர்ந்து கராத்தே வகுப்புகள் மற்றும் நடன வகுப்புகளையும் நிறுத்தப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாககவும் கூறினார்.
இந்த அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தவிசாளர் எச்சரித்தார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago