Sudharshini / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
கிராமசேவகரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் அவரை கடமை அறையில் வைத்து பூட்டியதாக கூறப்படும் பெண்ணை, கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பிபிலை, ரத்துபஸ்சிட்டிய
பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி கிராமசேவையாளரின் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (14) சென்ற பெண்ணொருவர், கிராமசேவகரை வெளியேற விடாது, அவரை கடமை அறையில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
கிராமசேவகர் தமக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் உடனடியாக தனது அலைபேசியின் மூலம் பிபிலை
பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்கு வந்து அவரை மீட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தலைமறைவாகியுள்ளார்.
அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பிபிலை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026