Sudharshini / 2016 மார்ச் 16 , மு.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்பதற்கான நிதியுதவியை வழங்கும் வேலைத் திட்டமொன்றை சப்ரகமுவ மாகாண சபை ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், முதற்கட்டமாக ஒரு குடும்பத்துக்கு இரண்டரை மில்லியன் ரூபாய் வீதம் 80 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வொன்று, சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாண சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின்; மேற்பார்வையின் கீழ், மேற்படி வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
மேற்படி வேலைத் திட்டத்துக்கமைய, 2016ஆம் ஆண்டு 80 வீடுகளை அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென 200 மில்லியன் ரூபாய் நிதி சப்ரகமுவ மாகாண சபையின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, மாகாண சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன, சப்ரகமுவ மாகாண சபையின் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர்
எச்.பி.குலரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என்.பெலிகம்மன, உதவிச் செயலாளர் எம்.பி.எஸ்.என்.குமாரகே உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago