2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த நால்வர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமான முறையில் மதுபானம், கசிப்பு தயாரித்த குற்றச்சாட்டில், நான்கு சந்தேக நபர்களை, பொலிஸார் நேற்று (14) மாலை கைதுசெய்துள்ளனர். 

இதன்போது மதுபானம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலினடிப்படையில், மேற்கொண்ட விசாரணையின் போது, ஓர் இடத்தில் இருவரும் மற்றுமொரு பிரதேசத்திலிருந்து இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

மேற்படி நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .