2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சட்டவிரோத கட்டட்டங்களை அகற்ற அதிகாரம் வேண்டும்

Freelancer   / 2022 நவம்பர் 30 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

சட்ட விரோதமான கட்டடங்களை உடைத்து அகற்றும் அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டும் என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.

அக்குறணை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (28) இடம் பெற்ற ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அக்குறணை பிரதேசத்தில் சட்ட விரோதமான கட்டடங்கள் விடுமுறை தினங்களில் கட்டுவதாகவும்  அதனை கட்டுபடுத்துவதற்கு எவ்வித அதிகாரமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதனால், உள்ளூராட்சி மன்றங்களின் சட்டக் கோவையை திருத்தி சட்ட விரோத கட்டடங்களை அகற்றுவதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .