2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

சென்கிளையாரில் கவிழ்ந்த வேன்: சிறுவன் காயம்

Editorial   / 2026 ஜனவரி 29 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹற்றன்  -நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் வியாழக்கிழமை (29) அன்று முற்பகல் 9மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான வேன் கண்டி பகுதியில் வந்தது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 வாகனத்தை தந்தை செலுத்தி வந்துள்ளார். அவருடன் அவரது மூன்று பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.

விபத்தில் வாகனத்தில் பயணித்திருந்த ஒரு சிறுவன் காயமடைந்த நிலையில், பிரதேச மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனையவர்களுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கக்கூடிய வகையில் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X