2026 ஜனவரி 10, சனிக்கிழமை

சிறுவன் பாலியல் வன்கொடுமை ; மற்றுமொறு சிறுவன் கைது

Janu   / 2026 ஜனவரி 08 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தல பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட ஊவா , பெல்வத்தை பகுதியில் 12 வயதுடைய சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 14 வயதுடைய சிறுவன் புதன்கிழமை (07) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு சிறுவர்களும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே பாடசாலையில் கல்வி கற்று வருபவர்கள் என்பதுடன் 12 வயதுடைய சிறுவன் , சந்தேக நபரான சிறுவனின் வீட்டிற்கு சென்றிருந்த போது இச் சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

 சந்தேக நபரான சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 சுமனசிறி குணதிலக


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .