Editorial / 2026 மார்ச் 27 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர், வௌ்ளிக்கிழமை (27) காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, மல்வத்தை - நல்லதண்ணி பாதையிலுள்ள கங்குலதென்ன பகுதியில் வைத்து திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இணைந்து, அவரை நல்லதண்ணி நகருக்குத் தூக்கி வந்துள்ளனர். அங்கிருந்து நோயாளி காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் உடல் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago