Kogilavani / 2017 ஜூன் 20 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இலங்கை விவசாயக் கல்லூரிகளில், டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் வைபவம், குண்டசாலை விவசாயக் கல்லூரியில், நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள குண்டசாலை, வவுனியா, பெல்வெஹர, அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய விவசாயக் கல்லூரிகளில், 2013-15 ஆண்டுகளில் டிப்ளோமா பயிற்சியை தொடர்ந்தவர்களுக்கே, சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
விசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், விசேட அதிதியாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வின்போது, குண்டசாலை விவசாயக் கல்லூரிக்காக சுமார் 65 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்படவுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago