Kogilavani / 2021 மே 18 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக்கோயா வைத்திசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்காக, தனிமைப்படுத்தப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தில் இருந்து வந்த அனைவரையும் வைத்தியசாலை நிர்வாகம் திருப்பி அனுப்பியதால், நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து, பொகவந்தலாவை பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் மேற்படி வைத்தியசாலையில் மாதாந்தம் சிகிச்சைப் பெறும் நோயாளர்கள், பொலிஸாரின் அனுமதியுடன் அதிகாலை 4.00 மணியளவில், வாடகைக்கு வாகனத்தை அமர்த்தி டிக்கோயா வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திலிருந்து வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது எனத் தெரிவித்து, மேற்படி நோயாளர்களை வைத்தியசாலையின் ஊழியர்கள் திருப்பி அனுப்பியுள்ளர்.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் வழங்கிய திகதிக்கு அமைவாகவே தாம் மாதாந்த சிகிச்சைக்கு வந்ததாகவும் எனினும் உரிய சிகிச்சைகளை வழங்காது வைத்தியசாலை நிர்வாகம் தம்மை திருப்பி அனுப்பியதாகவும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், ஆராய்ந்துப் பார்ப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago