Janu / 2025 மே 28 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நன்கு வளர்ந்த சிறுத்தையொன்று இரவும் பகலும் லிந்துலை -நாகசேன ஹீல் கூல்ட்ரீ தோட்டத்தில் சுற்றித் திரிவதைக் கண்டு தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
அந்த சிறுத்தை இரை தேடி தோட்ட குடியிருப்புகளுக்கு அருகில் வந்து, செல்லப்பிராணியான நாய்களை வேட்டையாடி செல்வதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தையும் காப்புக்காட்டையும் பிரிக்கும் வகையில் ஒரு வலை வேலி கட்டப்பட்டிருந்தாலும், சிறுத்தை அதை உடைத்துக் கொண்டு வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள் பல சந்தர்ப்பங்களில் அந்த சிறுத்தையை கண்டுள்ளதாகவும் தங்கள் உயிருக்கும், தங்கள் குழந்தைகளின் உயிருக்கும் தீங்கு விளைவிப்பதற்கு முன்பு அதை பிடித்து உரிய சூழலுக்கு கொண்டு சென்று விடுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago