2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: காதலனுக்கு வலை

Editorial   / 2023 மே 11 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொணராகல பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற இருபது வயது இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி சந்தேக நபர் சிறுமியை அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்று நண்பர் ஒருவரின் வீட்டில் கணவன் மனைவியாக தங்கியுள்ளார்.

சந்தேக நபரின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமணசிறி குணதிலக்க

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X