Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த இருவரை நாவலப்பிட்டி பொலிஸார் இன்று (15) கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நாவலப்பிட்டி கித்துல்கோட்டை, இம்புல்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், வீட்டில் நடைபெறும் நிகழ்வுக்காக எரிவாயு பெற வேண்டும் எனக் கூறி, அயலவர்களிடம் இருந்து 12.5 கிலோ 5 கிலோ எடையுள்ள 16 வெற்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு அந்த விற்பனை செய்துள்ளனர்.
இதற்கமைய, சிலிண்டர்கள் 10,000 மற்றும் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களுக்கு வெற்று எரிவாயு சிலிண்டர்களை வழங்கிய பிரதேசவாசிகள், நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 25-30 வயதுடையவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையானவர்கள் எனவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago